| 245 | : | _ _ |a மனோரா - |
| 300 | : | _ _ |a நினைவிடம் - வெற்றிச் சின்னம் |
| 500 | : | _ _ |a இக்கட்டடம் 22.30 மீ. உயரமுடைய இக்கட்டடம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டதாகவும்; அறுகோண அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதைச் சுற்றிலும் பெரிய அகழி ஒன்றும், அதையடுத்து மதில் சுவரும் காணப்படுகின்றது. ஒரு கோட்டையின் அமைப்பு போல அமைத்துள்ளனர். நுழைவு வாயிலில் அகழியின் மேல் ஓர் படிக்கட்டு, இவை தேவைக்கேற்ப இரண்டு மதில் சுவர்களுக்கும் இடையில் போடப்பட்டு பின்னர் மூடும் அமைப்பில் அமைத்துள்ளனர். தற்பொழுது ஒரு பாலம் போன்று அமைத்து, அகழி மீது பாதை ஒன்றைக் கட்டி உள்ளே செல்ல வழி அமைத்துள்ளனர். அகழியைச் சுற்றிலும் கட்டப்பட்ட கோட்டையின் மதில் சுவர், அதன் மேல்பகுதியில் படைவீரர்கள் ஆயுதங்களை ஏந்திய வண்ணமும், இடைப்பட்ட பகுதியில் பீரங்கியை நிறுத்தி படைவீரர்கள் பகைவர்களைக் தாக்க தயார் நிலையில் நிற்கும் வண்ணமும் அமைத்துள்ளனர். இச்செய்திகள் அனைத்தும் கி.பி. 1814-ஆம் ஆண்டு மோடி ஆவணத்தில் (மராட்டியர் காலத்திய ஆவணம்) குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டைக் கொத்தளங்கள், குதிரை லாயங்கள் என காலாட்படை வீரர்களுக்கு அமைவிடமும், குதிரைகள் தங்க இடமும் அமைத்துக் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு மூன்று நுழைவு வாயில்கள் உள்ளன. இக்கட்டட கலைப் பாணி குறிப்பிடத்தக்க சிறப்பினைப் பெற்றது. ஆங்கிலேயர்களின் உணர்வைப் புரிந்து கட்டப்பட்டது போலத் தோன்றுகின்றது. இந்த மனோரா கோட்டையும் அதன் மேலே எழுப்பிய துாண் அமைப்பும், அழகிய தூண்களைக் கொண்டும், அடிப்பகுதி அகன்றும், மேலே செல்லச் செல்ல சற்று குறுகிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடுக்கிலும் புறாக் கூண்டு போல துவாரம் அமைத்துள்ள அழகும், தற்பொழுது அதிக அளவில் புறாக்கள் தங்கி இருப்பதும் காண்போரை வியக்கச்செய்யும் அளவிற்கு அமைந்துள்ளது. ஒன்பது அடுக்கிற்கும் செல்வதற்கு வளைவு, வளைவான குறுகிய படிக்கட்டுகளும், மேலே நின்று கடற்கரையையும், கடலின் அலையையும், அதன் அழகையும் இரண்டாம் சரபோஜி மன்னன் தன் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இதனைக் கண்டு இன்புற்று சென்றுள்ளார் என்பதையும் அவரது மோடி குறிப்புகள் கூறுகின்றன. |
| 510 | : | _ _ |a 1. தொல்லியல் சுற்றுலா, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2. மனங்கவரும் மனோரா கலங்கரை விளக்கம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. |
| 520 | : | _ _ |a தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை வட்டம், பட்டுக் கோட்டையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சரபேந்திரராஜன் பட்டினம் என்னும் ஊரின் அருகில் காணப்படும் கடற்கரையில் கட்டப்பட்டுள்ளது. "சேதுபாவா சத்திரம்' எனும் ஊராட்சியில், சரபேந்திரராஜன் பட்டினம் என்று அழைக்கப்பட்ட ஊர் முன்னர் சாளுவநாயக்கன் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதி வங்கக் கடலோரம் இயற்கை எழிலோடு திகழ்கின்றது. மனோரா எனும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச்சின்னம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்டு வரும் மரபுச் சின்னமாகும். மனோரா என்பது மினார் என்ற சொல்லில் இருந்து வந்தது. மினார் என்பது ரோம் நாட்டிலுள்ள டிராகனைப் போன்றது என்று கட்டடக்கலை வல்லுநர் பெர்கூசன் கூறுகின்றார். தூணைப் போன்ற உயரமான கட்டட அமைப்பைக் கொண்ட இத்தகைய சின்னம். மீனார் அரச மரபைச் சார்ந்த ஏம்பா என்ற மன்னரால் இரண்டு மினார்கள் (கி.பி. 1425-64) அவர்களின் வெற்றியின் நினைவாகக் கட்டினார்கள். இதனை வெற்றித்தூண் என்று அழைத்தனர். அதனைப் போன்றதுதான் மனோராவும். இதுவும் ஒரு வெற்றித் தூணாகவும் அக்காலத்திய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்துள்ளது. பிரஞ்சுப் புரட்சி கி.பி. 1789-இல் ஏற்பட்டபொழுது அப்புரட்சியில் நெப்போலியன் ஈடுபாடு கொண்டார். கி.பி. 1795 முதல் 1799 வரை பிரான்சின் சிக்கலான அரசியல் சூழ்நிலை நெப்போலியனைப் படைத்தலைமை ஏற்க வாய்ப்பளித்தது. வீரமும், தன்னம்பிக்கையும் நிறைந்தவன் நெப்போலியன். எதிரிகளைத் துச்சமென மதித்துப் போரினை விரும்பி ஏற்கும் தன்னிகரில்லா வீரனாகத் திகழ்ந்தவன் நெப்போலியன். எனவேதான் அத்தகு வீரன் தலைமையேற்று வழிநடத்திய போர் என்றும், மேலும் நெப்போலியன் தழுவிய தோல்வி இவை அனைத்தும் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அத்தகு வீரமிக்க நெப்போலியனின் தோல்வியைக் கொண்டாடியது பிற நாடுகள். எனவேதான் மனோரா எனும் நினைவுச்சின்னம் எழுந்ததே மாவீரன் நெப்போலியனின் தோல்வியை உலகுக்கு உணர்த்தவே என்பது இதன் நோக்கமாகும். |
| 653 | : | _ _ |a மனோரா, நினைவுச் சின்னம், வெற்றிச் சின்னம், இரண்டாம் சரபோஜி, தஞ்சை, நெப்போலியன், ஆங்கிலேயர் |
| 710 | : | _ _ |a விக்கிப்பீடியா |
| 752 | : | _ _ |a மல்லிப்பட்டினம் |c மல்லிப்பட்டினம் |d தஞ்சாவூர் |f பட்டுக்கோட்டை |
| 906 | : | _ _ |a கி.பி.1814 |
| 914 | : | _ _ |a 10.2688896 |
| 915 | : | _ _ |a 79.3049286 |
| 934 | : | _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில், சரசுவதி மகால் நூலகம், இராசராசன் மணிமண்டபம், தஞ்சை அரண்மனை |
| 995 | : | _ _ |a TVA_MON_00007 |
| barcode | : | TVA_MON_00007 |
| book category | : | நினைவிடங்கள் |
| cover | : |
|
| Primary File | : |